×

பனி காலம் நிறைவடைய உள்ள நிலையில் நீலகிரியில் உழவுப்பணியில் விவசாயிகள் மும்முரம்

ஊட்டி:  நீலகிரியில் உறை பனி பொழிவு காலம் நிறைவடைய உள்ள நிலையில் விவசாய பணிக்காக ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் விவசாய நிலங்கள் உழவுப்பணி மும்முரமாக நடந்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் சுமால் 7 ஆயிரத்து 500 எக்டர் பரப்பளவில் கேரட், உருளைகிழங்கு, கேரட், பீட்ரூட், பீன்ஸ், பூண்டு உள்ளிட்ட மலை காய்கறிகள் விளைவிக்கப்பட்டு வருகிறது.
இதனை ஊட்டி மற்றும் மேட்டுபாளையம் பகுதிகளில் உள்ள மார்க்கெட்கள் மூலம் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக நிலவி வரும் உறை பனி பொழிவால் காய்கறி விவசாயம் சற்று தேக்கமடைந்து இருந்தது.

இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் தற்போது பனிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில் நீலகிாி மாவட்டத்தில் ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் முதல் போக காய்கறி விவசாய பணிகளை விவசாயிகள் துவக்கியுள்ளனா். ஊட்டி அருகேயுள்ள முத்தோரை பாலாடா, கப்பத்தொரை, கல்லக்கொரை ஆடா, கேத்தி பாலாடா, கொல்லிமலை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் தங்களின் நிலங்களை சமன்படுத்தி டிராக்டர்கள் மூலம் நிலத்தை நன்கு உழுது விதைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.

பனி சீசன் நிறைவடைந்த உடன் விதைப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளனர். இனிவரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்க வாய்ப்புள்ளது என்பதால் காய்கறிகளுக்கு பாய்ச்ச வசதியாக நிலங்களில் பிளாஸ்டிக் கொண்டு தற்காலிக தண்ணீர் தொட்டிகள் அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்கனவே பயிரிட்டுள்ள காய்கறி பயிா்களை வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு நீா் பாய்ச்சும் பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.

Tags :
× RELATED மலர் கண்காட்சியையொட்டி வெளி மாவட்டங்களுக்கு 75 சிறப்பு பஸ்கள் இயக்கம்