×

இடைத்தேர்தல் முடிந்ததையடுத்து மக்களுக்கு வழங்க ஈரோடு தாலுகாவில் இலவச வேட்டி, சேலை ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைப்பு

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நிறைவடைந்ததையொட்டி ஈரோடு தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் மக்களுக்கு வழங்க இலவச வேட்டி, சேலை ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடந்தது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் மக்களுக்கு இலவச வேட்டி, சேலை ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்படுவது வழக்கம். இதன்படி, நடப்பாண்டு ஈரோடு மாவட்டத்தில் ரேஷன் கடைகள் மூலமாக இலவச வேட்டி சேலை வழங்கப்பட்டது. இதில், ஒரு சில இடங்களில் இலவச வேட்டி, சேலை காலதாமதமாக வந்ததால், இருப்புக்கு ஏற்றவாறு மக்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. இதில், ஈரோடு தாலுகா பகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக இலவச வேட்டி, சேலை வழங்கப்படவில்லை. அவை ஈரோடு தாலுகா அலுவலகத்தில் உள்ள சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் அலுவலக குடோனில் இருப்பு வைக்கப்பட்டது. இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் நிறைவடைந்ததையொட்டி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் அலுவலகத்தில் இருந்த இலவச வேட்டி, சேலைகள், ஈரோடு தாலுகாவிற்கு உட்பட்ட 81 ரேஷன் கடைகளுக்கு வேனில் ஏற்றி அனுப்பப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது, ‘இதில், 68 ஆயிரம் ஆண்கள், பெண்களுக்கு இலவச வேட்டி, சேலை அனுப்பப்பட்டுள்ளது. தேர்தல் காரணமாக இலவச வேட்டி, சேலை வழங்குவது நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது தேர்தல் நிறைவடைந்ததால் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட உள்ளது’ என்றனர்.

Tags : vedi ,saree ,Erode taluk ,
× RELATED 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட தார்...