×

கோவில்பட்டியில் இணையவழி பட்டா சிறப்பு முகாம்: ஆர்டிஓ மகாலட்சுமி பங்கேற்பு

கோவில்பட்டி, மார்ச் 5: கோவில்பட்டி வட்டத்தில் நடைபெற்ற இணையவழி பட்டா சிறப்பு முகாமில் ஆர்டிஓ மகாலட்சுமி பங்கேற்று பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெற்றார். தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவின்பேரில் கோவில்பட்டி வட்டத்தில் பாண்டவர்மங்கலம், நாலாட்டின்புத்தூர், அய்யனேரி கிராமங்களில் இணையவழி உட்பிரிவு பட்டா சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.

கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமி, தாசில்தார் சுசீலா, சமூக பாதுகாப்பு திட்டம் தனி தாசில்தார் ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு இணையவழி உட்பிரிவு பட்டா தொடர்பான மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. முகாமில் வட்ட துணை ஆய்வாளர் காளிராஜ், நில அளவை சார் ஆய்வாளர் செந்தில்குமார், மரியதர்ஷினின், சுப்பிரமணியன், ஜோதிமுருகன், சுகன்யாதேவி, அய்யம்மாள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Kovilpatti ,RTO ,
× RELATED கோவில்பட்டி ஆர்டிஓ ஆபீசில் சுமை...