×

மாவட்ட துணை செயலாளர் சேங்கை மாறன் அழைப்பு: சிவகங்கை மாவட்ட எல்லையில் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு


சிவகங்கை, மார்ச். 5: திருப்புவனத்தில் நகர் மற்றும் மேற்கு, கிழக்கு ஒன்றிய, திமுக செயற்குழு கூட்டம் நடந்தது. அவைத்தலைவர் இளங்கோவன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் வசந்தி சேங்கைமாறன், கடம்பசாமி முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைச் செயலாளர், பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் சிறப்புரையாற்றினர். கீழடி அகழ்வாராய்ச்சி அருங்காட்சியத்தை திறக்க வருகை தரும் தமிழ்நாடு முதலமைச்சரை சிவகங்கை மாவட்ட எல்லையில் மாவட்ட திமுக மற்றும் திருப்புவனம் ஒன்றிய, நகர திமுக சார்பில் கட்சியினர் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு வரவேற்பு அளிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில். திருப்புவனம் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் மூர்த்தி, திருப்புவனம் பேரூராட்சி துணைத் தலைவர் ரகுமத்துல்லாகான், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பொற்கோ, மாவட்ட கழக பிரநிதிகள் பிச்சைமணி, ராமலிங்கம், ஈஸ்வரன், சுப்பையா, அக்னிராஜ், பாலகிருஷ்ணன், நிர்வாகிகள், சக்திமுருகன், மகேந்திரன், போஸ், மீனாட்சிசுந்தரம், மணிகண்டன், கெங்குராமன், இளைஞரணி அமைப்பாளர்கள் தேவதாஸ், அறிவுக்கரசு, முத்துக்குமார், மீனவரணி அண்ணாமலை, மாணவரணி காளிதாஸ், பாண்டியர்கிருஷ்ணன் மற்றும் ஒன்றிய, வட்டக் கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags : District Deputy Secretary ,Sengai Maran ,Chief Minister ,Sivagangai ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...