×

திருக்கோஷ்டியூர் கோயிலில் நாளை தெப்பம் முட்டுத் தள்ளுதல்

திருப்புத்தூர், மார்ச் 5:திருப்புத்தூர் அருகே திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப்பெருமாள் கோயிலில் மாசி மக தெப்ப உற்சவத் திருவிழா கடந்த பிப்.26ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. 2ம் நாள் முதல் 6ம் நாள் வரை தினந்தோறும் காலையில் சுவாமி திருவீதி புறப்பாடும், இரவு சிம்மம், ஹனுமன், கருடசேவை, சேஷ வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி திருவீதி புறப்பாடும் நடைபெற்றது. 7ம் திருநாளான நேற்று மாலை தெப்பக்குள மண்டபம் முன்பு முகூர்த்தககால் நடும் நிகழ்வு நடந்தது. 8ம் திருநாளான இன்று காலை சுவாமி திருவீதி புறப்பாடும், இரவு தங்க குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெறும்.

9ம் திருநாளான நாளை 6ம் தேதி காலை வெண்ணைத்தாழி சேவையில் பெருமாள் திருவீதி புறப்பாடும், 10 மணியளவில் தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சியும் நடைபெறும். இரவு பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி தங்க பல்லக்கில் திருவீதி புறப்பாடு நடைபெறும். வரும் 7ம் தேதி இரவு 9 மணியளவில் பெருமாள் தேவி, பூதேவியருடன் மின் ஒளியால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி தெப்ப உற்சவம் நடைபெறும்.

Tags : Thirkoshtiyur temple ,
× RELATED திண்டுக்கல் மாவாட்டத்தில்...