×

கடைகளில் மருந்துகள் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும்: தமிழ்நாடு மருந்தாளுனர் சங்கம் கோரிக்கை

பழநி, மார்ச் 5: மளிகை, பெட்டி கடைகளில் மருந்துகள் விற்பனை செய்வதை தடுக்க வேண்டுமென தமிழ்நாடு மருந்தாளுனர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்ட மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளருக்கு, தமிழ்நாடு மருந்தாளுனர் நலச்சங்கத்தினர் அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாது: அனைத்து மருந்து கடைகளிலும் முழுநேர மருந்தாளுனர்கள் கண்டிப்பாக இருக்க ஆவண செய்ய வேண்டும்.

மருந்தின் தன்மை, வீரியம், அளவு போன்றவைகளை பற்றி தெரியாமல் மருந்துகளை விநியோகம் செய்யும் போலி மருந்தாளுனர்கள் மருந்துகள் கையாளுவதை தடை செய்ய வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் உள்ள மருந்தகங்களில் விதிமுறையை மீறிய உரிமம் மற்றும் மருந்தாளுனர்கள் இல்லாத மருந்தகங்களின் மீது பாரபட்சமில்லாத நடவடிக்கை வேண்டும். மளிகை, பெட்டி கடைகளில் மருந்துகள் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

Tags : Tamil Nadu Pharmacist Association ,
× RELATED கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்