×

அரியலூர் வட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு குறும்பட போட்டி மார்ச் 13க்குள் அனுப்ப வேண்டும்: எஸ்பி ஷ்யாம்ளாதேவி தகவல்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார்பாக பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் குறும்பட போட்டி தயாரிப்பு களை வரும் 13ஆம் தேதிக் குள் அனுப்பிட வேண்டும். பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளா தேவி அழைப்பு. இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது : பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளா தேவி, இளைஞர்களின் தனி திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார்பில் குறும்பட போட்டி நடத்துவதாக தெரிவித்துள்ளார். இந்த போட்டி யானது பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் என்பதை அடிப்படை யாக கொண்டு பின்வரும் தலைப்புகளில் குறும்படம் தயாரித்து அனுப்ப வேண்டும்.

1.சாலை பாதுகாப்பு, 2.கா வல் உதவி செயலி, 3.இ ணையதள குற்றங்கள், 4.பெண்களுக்கு எதிரான குற்றங்கள், 5.போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஆகியத்தலைப்புகளில் குறும்படம் தாயாரித்து அனுப்ப வேண்டும். குறும்படம் அனைத்தும் உங்க ளது சுய படைப்புகளாக இருக்க வேண்டும். மற்றும் தங்களது குறும்படம் 3 நிமிடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். தாங்கள் தயாரித்துள்ள விழிப்புணர்வு குறும்படத்தினை பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள தனிப்பிரிவு அலுவலகத்தில் செயல்பட்டு வரும் சமூக ஊடகவியல் பிரிவில் நேரிலோ அல்லது plrsmc2019@gmail. com என்ற மின்னஞ்சல் வா யிலாகவோ அனுப்பி வைக் கலாம்.

மேலும் மின்னஞ்ச லில் அனுப்பும் நண்பர்கள் தங்களது பெயர் மற்றும் முகவரியினை 9498100690 என்ற தொலைப்பேசியின் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். குறும்படம் அனுப்ப கடைசி தேதி வருகிற 13ம் தேதியாகும். போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் பெரம்பலூர் மாவட்ட எஸ்பியால் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் சிறந்த முதல் மூன்று குறும்பட தயாரிப்பாளர்களுக்கு சிறப்பு பரிசுகள் காத்திருக்கின்றன. மேலும் தாங்கள் எடுக்கும் குறும் படம் காவல்துறையின் சார்பில் FaceBook, Twitter, Instagram & Youtube ஆகிய சமூக வலைதளப் பக்கங்க ளில் பதிவிடப்படும்.

பொ துமக்களின் நலனுக்காக சேவை நோக்கில் மட்டுமே தயாரிக்கப்படும் தங்களது குறும்படத்தினை மாவட்ட காவல்துறையினரிடம் சமர்பித்த பின்பு தாங்களால் காப்புரிமை கேட்க இயலாது என்பதையும் தெரிவித் துக் கொள்கிறோம்.இந்த குறும்பட போட்டியில் கல்லூரி மாணவர்கள், பணியில் உள்ளவர்கள், இளை ஞர்கள் என விருப்பம் உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். மேலும் தொடர்புக்கு பெரம்பலூர் மாவட்ட காவ ல்துறை சமூக ஊடகவியல் பிரிவு: 9498100067, 87608-93036 என்ற எண்களுக்குத் தொடர்புகொள்ளலாம் என எஸ்பி தெரிவித்துள்ளார்.

Tags : Perambalur District Police ,Ariyalur Circle ,SP ,Shyamladevi ,
× RELATED போக்குவரத்து பாதிப்பு...