×

(வேலூர்) அழுகிய முட்டைகளை மாணவர்களுக்கு தரக்கூடாது சத்துணவு அமைப்பாளர்களுக்கு உத்தரவு அணைக்கட்டு பிடிஓ அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம்

அணைக்கட்டு, மார்ச் 4: அணைக்கட்டு பிடிஓ அலுவலகத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் அழுகிய முட்டைகளை பள்ளி மாணவர்களுக்கு வழங்கக்கூடாது என சத்துணவு அமைப்பாளர்களுக்கு உத்தரவிடப்பட்டது. வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஒன்றியத்துக்குட்பட்ட கிராமங்களில் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் இயங்கி வருகிறது. இப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தினசரி சத்துணவு வழங்கப்படுகிறது. இந்நிலையில் ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளிகளை சேர்ந்த சத்துணவு அமைப்பாளர்களுக்கான ஆய்வு கூட்டம் அணைக்கட்டு பிடிஓ அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் நடந்தது.

பிடிஓ அலுவலக சத்துணவு திட்ட உதவியாளர் பிரவீன்குமார் வரவேற்றார். இதில் சத்துணவு திட்ட தலைமையிடத்து துணை பிடிஓ வெங்கடேசன் தலைமை தாங்கி பேசியதாவது: மாணவர்களுக்கு வழங்கப்படும் முட்டைகள் வேக வைக்கும் முன்பாக நல்ல நிலையில் உள்ளதா? அல்லது கெட்டு போயுள்ளதா என பார்க்கவேண்டும். முட்டை அழுகி இருந்தால் அதனை மாணவர்களுக்கு வழங்கக்கூடாது. சத்துணவு கூடங்களுக்கு வழங்கப்படும் முட்டைகள் அரசு முத்திரையுடன் வெளியில் விற்பது தெரிந்தால் தகவல் தெரிவிக்க வேண்டும். தினசரி மெனுவில் உள்ளபடிதான் மாணவர்களுக்கு உணவு சமைத்து பரிமாற வேண்டும். அவ்வாறு மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் முன் சமைத்த உணவில் மாதிரி எடுத்து பள்ளி தலைமை ஆசிரியர், சத்துணவு அமைப்பாளர் சாப்பிட்டு பார்த்த பின்னரே மாணவர்களுக்கு வழங்கவேண்டும். தினசரி காலை 9 மணிக்கு அமைப்பாளர்கள், சமையலர்கள் பள்ளிக்கு வந்துவிட வேண்டும். மதியம் 2 மணிக்கு மேல்தான் வீட்டிற்கு செல்லவேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்யாதவர்கள் பதிவு செய்வதற்கான படிவங்களை பூர்த்தி செய்து தரவேண்டும்.

Tags : Vellore ,Damkadu PTO ,
× RELATED வேலூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையம்...