×

இயற்கை விவசாய மிளகாய்க்கு மவுசு ஜெர்மன் நிறுவனம் ஆய்வு

கமுதி: கமுதி அருகே இயற்கை விவசாய மிளகாய் வத்தலை கொள்முதல் செய்வது குறித்து ஜெர்மன் நாட்டு தனியார் நிறுவன ஊழியர் நேரில் ஆய்வு செய்தார். கமுதி அருகே கோரைப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த இயற்கை விவசாயி ராமர், 15 ஏக்கர் நிலத்தில், இயற்கை முறையில் மிளகாய் விவசாயம் செய்து, அதனை அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் அமெரிக்காவை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர்கள் நேரில் வந்து பார்வையிட்டு 200 டன் மிளகாய் வத்தலுக்கான ஒப்பந்தம் செய்து சென்றனர்.

இதைத் தொடர்ந்து நேற்று ஜெர்மன் நாட்டை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஜோன்ஸ்டன், குஜராத் மாநில தனியார் கொள்முதல் நிறுவனத்துடன் இணைந்து, இயற்கை விவசாயி ராமரின் விவசாய நிலத்தை பார்வையிட்டனர். ராமநாதபுரம் மாவட்ட குண்டு மிளகாய்க்கு புவிசார் குறீயீடு கிடைத்திருப்பதை அறிந்து கொண்ட ஜெர்மன் நிறுவன ஊழியர் 50 டன் குண்டு மிளகாய் வத்தல், 50 டன் சம்பா மிளகாய் வத்தல் கொள்முதல் செய்ய விரைவில் ஒப்பந்தம் செய்யப்படும் என கூறிச் சென்றதாக விவசாயி ராமர் தெரிவித்தார். இதுவரை சம்பா மிளகாய் வத்தல் மட்டுமே வெளிநாட்டினர் கொள்முதல் செய்து வந்த நிலையில், தற்போது ராமநாதபுரம் மாவட்ட குண்டு மிளகாய் வத்தலும் வெளிநாட்டினரை கவர்ந்து வருவதாக அவர் தெரிவித்தார்.

Tags : Mouse German Institute ,
× RELATED பட்டாசு திரி பதுக்கிய இருவர் கைது