×

முதல்வர் பிறந்தநாளை கிராமங்கள் தோறும் கொண்டாட வேண்டும்

தர்மபுரி: தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். நகர செயலாளர் நாட்டான் மாது வரவேற்றார். முன்னாள் எம்பியும், தலைமை செயற்குழு உறுப்பினருமான எம்ஜி சேகர், மாவட்ட பொருளாளர் தங்கமணி, மாவட்ட துணைச் செயலாளர்கள் உமாசங்கர், ரேணுகாதேவி, ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர்கள் ஏலகிரி நடராஜ், சரஸ்வதி துரைசாமி, சோலை மணி, வேலுமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான தடங்கம் சுப்ரமணி கலந்து கொண்டு தீர்மானங்கள் குறித்து பேசினார். தமிழ்நாடு முதல் அமைச்சரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் பிறந்தநாளை தர்மபுரி கிழக்கு மாவட்டத்தில் கிராமங்கள் தோறும் சிறப்பாக கொண்டாட வேண்டும். விழாவையொட்டி கட்சி நிர்வாகிகள் மற்றும் சார்பு அமைப்பு நிர்வாகிகள் கொடி ஏற்றியும், ஏழை எளியோர், ஆதரவற்றோர், மாணவ,-மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு, அன்னதானம் வழங்கியும், நல்ல உதவிகள் வழங்கியும் கொண்டாட வேண்டும். என்றார். தொடர்ந்து பிரமாண்ட கேக் வெட்டி கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கினார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தர்மபுரி கிழக்கு மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடியில் இரவு பகல் பாராமல் அயராது பாடுபட்ட வாக்கு சேகரித்த கட்சியின் நிர்வாகிகள், சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பது, மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் நியமிக்கப்பட்டுள்ள முகவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் முன்னாள் நகர செயலாளர் அன்பழகன், ஒன்றிய செயலாளர்கள் கேஎஸ்ஆர் சேட்டு, சண்முகம், வைகுந்தன், செல்வராஜ், மல்லமுத்து, சபரிநாதன், மடம் முருகேசன், கருணாநிதி, மாவட்ட சார்பு அமைப்பு செயலாளர்கள் முத்துலட்சுமி, பொன்மகேஸ்வரன், கௌதம், காசிநாதன், ரஹீம், ரவி, குமார், நகர நிர்வாகிகள் அழகுவேல், முல்லைவேந்தன், கோமளவள்ளி ரவி, அன்பழகன், சம்பந்தம், கனகராஜ், சுருளிராஜன், நல்லம்பள்ளி ஒன்றிய குழு துணை தலைவர் பெரியண்ணன், வக்கீல் அசோக்குமார், வெல்டிங் ராஜா உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள், சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Chief Minister ,
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா