×

கேரளாவிற்கு இறைச்சிக்காக கொண்டு செல்லப்பட்ட 49 எருமை மாடுகள் பறிமுதல் 5 பேர் மீது வழக்கு

விருதுநகர்: ஆந்திராவிலிருந்து கேரளாவிற்கு இறைச்சிக்காக கொண்டு செல்லப்பட்ட 49 எருமை மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டன. விருதுநகர் சத்திரரெட்டியபட்டி சோதனை சாவடியில் எருமை மாடுகளை இறைச்சிக்காக கொண்டு செல்வதை மதுரை சென்று திரும்பிய விலங்குகள் பாதுகாப்பு அமைப்பினை சேர்ந்த சுனிதா(39) பார்த்துள்ளார். இதுகுறித்து செக்போஸ்ட் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களது உதவியுடன் லாரியை நிறுத்தி சோதனையிட்ட போது லாரியில் 49 எருமை மாடுகளை நிற்க கூட இடமில்லாமல் நெருக்கடியில் சிக்கி தவித்தது தெரிய வந்தது. மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தியதில், ஆந்திர மாநிலம் நெல்லூரியிலிருந்து கொல்லத்திற்கு இறைச்சிக்காக 49 மாடுகள் கொண்டு செல்வது தெரியவந்தது. மேலும் 10வயதிற்கு மேற்பட்ட மாடுகளை மட்டும் இறைச்சிக்காக கொண்டு செல்ல வேண்டுமென்பதை மீறி லாரியில் மாடுகளை ஏற்றி சென்ற டிரைவர்கள் தண்டபாணி, மணிகண்டபிரபு, மாடுகளை வாங்கி ஏற்றி விட்ட வெங்கடாசலம், தரகர்கள் சிரஞ்சீவி, சுரேஷ் ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து பறிமுதல் செய்த 49 எருமை மாடுகளும் விலங்குகள் பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த சுனிதா பராமரிப்பில் உள்ளது.


Tags : Kerala ,
× RELATED ஓடும் பஸ்சிலிருந்து கீழே விழ இருந்த வாலிபரை காப்பாற்றிய கண்டக்டர்