×

பல்லடம் அருகே தீக்குளித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு

பல்லடம்: பல்லடம் அருகே வாலிபர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பல்லடம் அருகே தெற்குபாளையம் காலனி பகுதியை சேர்ந்த கருப்பையா என்பவரது மகன் முனுசாமி (30) பனியன் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.  இந்நிலையில் கடந்த பிப்ரவரி 9ம் தேதி வீட்டில் தனியே இருந்தவர், தனக்குத்தானே பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி பெற்று மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதையடுத்து அவரது தந்தை கருப்பையா கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.Tags : Palladam ,
× RELATED புகையிலை பொருட்கள் பறிமுதல்