×

தர்மபுரி மாவட்டத்தில் மாணவ, மாணவிகள் 1070 பேர் களப்பயணம்

தர்மபுரி, பிப்.28: தர்மபுரி மாவட்டத்தில் உயர்கல்வி வழிகாட்டிக்காக 107 அரசு பள்ளியைச் சேர்ந்த 1070 மாணவ, மாணவிகள் களப்பயணமாக அழைத்துச் செல்லப்பட்டனர். தர்மபுரி மாவட்ட கல்வித்துறை சார்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் களப்பயணம் திட்டத்தின் கீழ் கல்லூரிகளை பார்வையிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தர்மபுரி இலக்கியம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்து துவங்கிய களப்பயணத்தை கலெக்டர் சாந்தி துவக்கி வைத்தார். அப்போது, மாணவ- மாணவிகளுடன் கலந்துரையாடினார். நான் முதல்வன் திட்டத்தின் கீழ், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 107 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் தலா 10 பேர் வீதம் 1070 பேர் களப்பயணமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

இக்களப்பயணத்தின் மூலம் கல்லூரிகளில் உள்ள பல்வேறு துறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள், கலையரங்கம், விளையாட்டுத் திடல் உள்ளிட்ட வசதிகளை அறிந்து கொள்ள உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் குணசேகரன், மாவட்ட கல்வி அலுவலர்கள், உதவித் திட்ட அலுவலர்கள், பள்ளித் துணை ஆய்வாளர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கராத்தே போட்டியில்: வென்றவர்களுக்கு சான்றிதழ்தர்மபுரி, பிப்.28: தர்மபுரி இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கராத்தே பயிற்சி போட்டி நடந்தது. இப்போட்டிக்கு மாஸ்டர் கலைச்செல்வன் தலைமை வகித்தார். இதில், 25க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயிற்சி செய்தனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு மஞ்சள், ஆரஞ்சு, பச்சை இரண்டாவது கிரேடு, முதல் கிரேடு, பர்ப்பிள், பிளாக் பெல்ட் மற்றும் சான்றிதழ்களை டாக்டர் ஜகேஷ்காமத் மற்றும் தொழிலதிபர் முருகன் ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சியில் பிளாக்பெல்ட் மனோகரன், துரைமணி, முனியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Dharmapuri district ,
× RELATED தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில்...