×

மணப்பாறை நீதிமன்றத்தில் வைக்கப்பட்ட கூண்டுக்குள் சிக்கிய 2 குரங்குகள்

மணப்பாறை: திருச்சி மாவட்டம் மணப்பாறை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்களுக்கும், நீதிமன்ற பணிகளுக்கும் தொந்தரவு அளித்து வந்த குரங்குகள் நேற்றுமுன்தினம் வனத்துறையினரால் பிடிக்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது மணப்பாறை குளித்தலை சாலையில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் உள்ளது இங்கு சார்பு நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றம் ஆகியவை செயல்பட்டு வருகிறுது நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் நீதிமன்ற வளாகத்தில் புகுந்த குரங்கு கூட்டம் ஒன்று, நீதிமன்றத்திற்கு வரும் பொதுமக்களுக்கும், நீதிமன்ற பணிகளுக்கும் தொடர்ந்து தொந்தரவு அளித்து வந்துள்ளது

அதனைத்தொடர்ந்து வனச்சரகர் மகேஸ்வரன் தலைமையில் வனவர் செல்வேந்திரன், வனக்காப்பாளர் கருப்பையா, வனகாவலர் ஜீவானந்தம் ஆகியோர் விராலிமலையிலிருந்து குரங்குகளை கூண்டு அமைத்து பிடிப்பவர்களை நீதிமன்றத்திற்கு வரவழைத்து இரு நாட்கள் கூண்டு அமைத்து குரங்குகளுக்காக காத்திருந்தனர் இந்நிலையில் நேற்றுமுன்தினம் குரங்குகள் பொறியில் சிக்கி கூண்டில் அடைபட்டது கூண்டில் சிக்கிய குரங்குகளை பொய்கைமலை வனப்பகுதி கொண்டு சென்று விடப்பட்டது

Tags : Manaparai ,
× RELATED டூவீலர் திருட முயன்ற 2 வாலிபர்கள் கைது