கடத்தூர், பிப். 25: கடத்துார் ஒன்றியம், ஒசஅள்ளி ஊராட்சி வேடியூரில், சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மகாத்மா காந்தி தேசிய ஊரக மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ், 2021-2022ம் ஆண்டில், ஒசஅள்ளி ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட திட்டப்பணிகள், வழங்கப்பட்ட ஊதியம் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இதில் பங்கேற்ற பொதுமக்கள், இனிவரும் நாட்களில், 100 நாள் வேலை திட்டத்தின் மூலம், அனைவருக்கும் வேலை வழங்க உத்தரவாதம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். கூட்டத்தில் ஊராட்சி செயலர் செந்தில்குமார், துணை தலைவர் ஹரியண்ணன் மற்றும் தணிக்கை குழு அதிகாரிகள், ஊர் பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.










