×

ஜல்லிக்கட்டு மைதானத்தை ஆர்டிஓ, டிஎஸ்பி ஆய்வு

சேந்தமங்கலம், பிப்.24: பொட்டிரெட்டிப்பட்டியில், ஜல்லிக்கட்டு போட்டி மைதானத்தை நாமக்கல் ஆர்டிஓ, டிஎஸ்பி நேரில் ஆய்வு செய்தனர். எருமப்பட்டி ஒன்றியம், பொட்டிரெட்டிப்பட்டி ஊராட்சியில், ஆண்டுதோறும் தைப்பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான போட்டியை நடத்த மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுக்கப்பட்டிருந்தது. ஜல்லிக்கட்டு நடத்தப்படும் இடத்தை விழா குழுவினர் தேர்வு செய்து, வாடிவாசல் அமைக்கும் இடத்தில் பூமி பூஜை செய்து பணிகள் தொடங்கியது. இதனை நாமக்கல் ஆர்டிஓ மஞ்சுளா, டிஎஸ்பி சுரேஷ், கால்நடை மருத்துவத்துறை உதவி இயக்குனர் மருதபாண்டி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.  ஜல்லிக்கட்டு மைதானத்தில் மாடு நிறுத்தும் இடம், வாடிவாசல், வாகனங்கள் நிறுத்துமிடம், மருத்துவ முகாம், ஆம்புலன்ஸ் நிறுத்துமிடம், காளைகளுக்கும், பார்வையாளர்களுக்கும் பாதுகாப்பு உள்ளதா என்ன கேட்டறிந்தனர். தயார் செய்யப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து விட்டு, அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினர். விழா குழுவின் சார்பில், 3 தேதிகள் தயார் செய்து மாவட்ட நிர்வாகத்திடம் கொடுக்க வேண்டும். அதில் ஒரு தேதியை முடிவு செய்து, மாவட்ட நிர்வாகம் அறிவிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Jallikattu ,RTO ,DSP ,
× RELATED ஜல்லிக்கட்டு பின்னணியில் உருவாகும் படம்