×

நத்தத்தில் கால்வாயில் விழுந்த கன்றுகுட்டி மீட்பு

நத்தம், பிப். 24: நத்தத்தில் அரசு மருத்துவமனை அருகே திண்டுக்கல் செல்லும் சாலையின் ஓரமாக கழிவுநீர் கால்வாய் செல்கிறது. அப்பகுதியில் நடைபெற்ற வர்த்தக நிறுவனங்களின் கட்டுமான பணிகளுக்கான ஜல்லி, மணல், கம்பி போன்ற பொருட்களை லாரிகளில் ஏற்றி சென்ற போது கால்வாய் மூடிகள் பாரம் தாங்காமல் சேதமடைந்த நிலையில் காணப்பட்டது. தொடர்ந்து அது சரிசெய்யப்படாமல் பாதுகாப்பற்ற நிலையில் இருந்து வந்தது. இந்நிலையில் நத்தம் அண்ணாநகரை சேர்ந்த ஒருவரது கன்றுகுட்டி எதிர்பாராத விதமாக கழிவுநீர் கால்வாயில் விழுந்துவிட்டது. கடந்த பல நாட்களுக்கு மேலாக கன்றுகுட்டி கால்வாயை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் நேற்று தீயணைப்பு மதுறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் பொதுமக்கள் உதவியுடன் 2 மணிநேரத்திற்கும் மேலாக போராடி கன்றுகுட்டியை பத்திரமாக மீட்டனர்.

Tags : Nadda ,
× RELATED திண்டுக்கல் அருகே பஸ்- வேன் மோதி 8 பேர் படுகாயம்