×

குடோன்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு

சேலம்: சேலம் மாவட்டத்தில் பழைய, புதிய பஸ் நிலையங்கள் மற்றும் ஆத்தூர், மேட்டூர், தலைவாசல், ஓமலூர் பஸ் நிலையத்தில் உள்ள பழக்குடோன்களில் செயற்கையாக பழங்கள் பழுக்க வைக்கப்படுகிறதா? என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கார்பைடு கல் மூலம் பழுக்க வைக்கப்படும் மா, வாழைப் பழங்கள் தான் தற்போது விற்பனைக்கு வருகிறது. கார்பைடு கல்லில் அசிட்டிலீன் வாயு உள்ளது. இந்த வாயுவின் மூலம் மா, வாழை போன்றவை 12முதல்24 மணி நேரத்துக்குள் பழுக்க வைக்க முடிகிறது. காய்களில் இயற்கையாக உள்ள எத்திலின் வாயு மூலம் அவை 48 முதல் 72 மணி நேரத்துக்குள் பழுத்துவிடும். எனினும், அவசர அவசரமாக கல்லா கட்டும் நோக்கத்தில் வியாபாரிகள் செயற்கையாக பழங்களை பழுக்க வைக்கின்றனர் என்கிறனர், மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்.இதுபோன்று செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழங்களை தொடர்ந்து உண்பதன் மூலம் நரம்பு மண்டலம் பாதிக்கும். கல்லீரல், குடல், இரைப்பையும் பாதிக்கும்.


குழந்தைகள், முதியவர்கள் இதுபோன்ற பழங்களை அதிகம் உட்கொண்டால், அவர்களுக்கு கடும் வயிற்றுப்போக்கு, ஒவ்வாமை ஏற்படலாம் என்றும் மாவட்ட உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். இதையடுத்து சேலம் மாவட்டத்தில் உள்ள பழக்குடோன்களை சுகாதார அதிகாரிகள், தீவிரமாக கண்காணித்து ஆய்வு செய்து வருகின்றனர்.இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘கோடை காலம் அடுத்த சிலவாரங்களில் தொடங்கவுள்ளது. அதே நேரத்தில் தற்போதே அளவுக்கதிமான வெப்பம் நிலவி வருகிறது.  இதனால் பழரசங்கள், குளிர்பானங்கள் அருந்தும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதற்கான பழங்களையும், அதோடு வாழைப்பழங்களையும் செயற்ைகயாக சிலர் பழுக்க வைத்து வருவதாக புகார்கள் வருகிறது. இதை கருத்தில் கொண்டு பழகுடோன்களை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். அதேபோல் பழரசவிற்பனை கடைகளிலும் ஆய்வு செய்து வருகிறோம்,’’ என்றனர்.

Tags : Kudones ,
× RELATED மாம்பழம் விற்பனை கடை, குடோன்களில் திடீர் ஆய்வு