×

ட்டங்கள் மக்களுக்கு சரியாக செல்கிறதா? தா.பழூர் ஒன்றிய அலுவலகத்தில் அரியலூர் கலெக்டர் திடீர் ஆய்வு

திதா.பழூர்: அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி மாவட்டம் முழுவதும் பல்வேறு பணிகள் குறித்து அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ஒன்றிய அலுவலகம் மற்றும் பொதுமக்களுக்கு அரசு சார்பில் வழங்கும் திட்டங்கள் சரியாக சென்றுள்ளதாக? ஊராட்சி சார்பில் நிதி ஒதுக்கப்பட்டு நடந்து வரும் பணிகள் என அனைத்தையும் நேரடியாக மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று கள ஆய்வு செய்து வருகிறார். இதில் பணிகள் குறித்தும் அந்த பணி மூலம் எந்த அளவிற்கு பயன் உள்ளது என்றும் அதன் தரம் குறித்தும் ஆய்வு செய்து வருகிறார்.


அதன் ஒரு பகுதியாக தா.பழூர் ஒன்றிய அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்திற்கு சென்ற அவர், அங்கிருந்து ஊரக வளர்ச்சி துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டறிந்தார். பின்னர் அலுவலக கோப்புகளை சரிபார்த்து அதற்கான புள்ளி விவரங்களையும் சேகரித்து வளர்ச்சி பணிகளை விரைந்து முடிப்பதற்கு அலுவலர்கள் அனைவரும் அர்ப்பணிப்போடு பணியாற்ற வேண்டும் என அறிவுரை வழங்கினார். ஆய்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன், விஸ்வநாதன் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உதவி பொறியாளர்கள் பணி மேற்பார்வையாளர்கள் என பலரும் உடனிருந்தனர்.

Tags : Ariyalur Collector ,Bhapur ,
× RELATED மனு கொடுத்த 30 நிமிடத்தில் நடவடிக்கை:...