×

நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் பிளாஸ்டிக் பொருட்கள் மறுசுழற்சி குறித்து விழிப்புணர்வு

திருவள்ளூர், பிப். 21:  பிளாஸ்டிக் பொருட்கள் மறுசுழற்சி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.    திருவள்ளுர் நகராட்சிக்குட்பட்ட சத்தியமூர்த்தி தெருவில் உள்ள க.மு.ந. சகோதரர்கள் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பிஸ்லரி நிறுவனம் சார்பாக  பிளாஸ்ட்டிக்  விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.  நகர்மன்றத் தலைவர் உதயமலர் பாண்டியன் தலைமை தாங்கினார். முதன்மை கல்வி அலுவலர் த.இராமன், மாவட்ட கல்வி அலுவலர் தேன்மொழி, நகராட்சி ஆணையர் கா.ராஜலட்சுமி, நகர்மன்ற துணைத் தலைவர் சி.சு.ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆர்.சிவராணி, உதவி தலைமை ஆசிரியர் டி.முருகவேல் ஆகியோர் வரவேற்றனர்.  இதில் மாவட்ட கலெக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டர்.

 கலெக்டர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் பேசும்போது: பிளாஸ்டிக் ஒரு இயற்கைக்கு முக்கியமான எதிரி. அதற்காக அரசு சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மீண்டும் மஞ்சப் பை திட்டம் அறிவிக்கப்பட்டு, பிளாஸ்டிக் பை தவிர்த்து மஞ்சப் பை என்ற திட்டத்தை பயன்படுத்தி வருகிறோம். அதுமட்டுமின்றி, பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்கான விழிப்புணர்வையும், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக்கை தடை செய்வதற்காகவும் அரசு சார்பாக பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறோம்.  

திருவள்ளுர் நகராட்சியில் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு ஒன்றரை டன் அளவிற்கு ஒரு முறை பயன்படுத்தப்படக்கூடிய பிளாஸ்ட்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள் என அனைத்து பகுதிகளிலும் ஒரு முறை பயன்படுத்தப்படக்கூடிய பிளாஸ்ட்டிக்கை பறிமுதல் செய்து வருகிறோம். மேலும், தடை செய்யப்பட்ட இந்த பிளாஸ்டிக்கை எங்கு தயாரிக்கப்படுகிறது என்பதை அறிந்து. அந்த நிறுவனங்களை மூடுவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.  

கடந்த ஒரு ஆண்டில் இரண்டு நிறுவனங்களை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, ஒரு முறை பயன்படுத்தப்படக்கூடிய தடை செய்யப்பட்ட பிளாஸ்ட்டிக்கை ஒழிப்பதற்கு பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறோம். அப்படியிருந்தும் பிளாஸ்டிக் கவர் மட்டுமி;ன்றி பல்வேறு தொழில் நிறுவனங்களிடமிருந்து வரக்கூடிய எப்.எம்.சி.ஜி தயாரிப்பு நிறுவனமான பிஸ்கட் புராடக்ட், மசாலா புராடக்ட், கோதுமை பாக்கெட், ஆயில் பாக்கெட் என நம் வீட்டில் ஒரு நாளைக்கு பயன்படுத்தப்படக்கூடிய பிளாஸ்டிக்கே அதிகமாக இருக்கும். இந்த புராடக்ட்டை யார் செய்கிறார்களோ அதாவது பிஸ்லரி தயாரிப்பாளர்கள் என்றால்; இதனால் சுற்றுச்சூழலுக்கு என்ன பிரச்சனைகள் வருகிறதோ அதனை நிவர்த்தி செய்வது அந்தந்த நிறுவனத்தின் பொறுப்பாகும்.  

வெளிநாடுகளில் பிளாஸ்டிக் பாட்டில்கள் உற்பத்தி செய்யும் ஒவ்வொரு நிறுவனமும் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பாட்டில்கள் நுகர்வோர் பயன்படுத்தப்பட்டதை ஒரு கட்டணமாக ₹ 20  என்ற பாட்டிலை திருப்பி கொடுத்தால் ரூபாய் 2 என்ற கட்டணம் முறையில் திருப்பி செலுத்தப்படுகிறது. அந்த மாதிரி இருந்தால் மக்கள் தானாக முன்வந்து உங்கள் கடைகளில் அந்த பிளாஸ்டிக் பாட்டில்களை கொடுப்பார்கள்.  இததேபோன்று அனைத்து நிறுவனங்களும் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பாட்டில்கள் ஒரு கட்டணம் கொடுக்கிறோம். அந்த பிளாஸ்;டிக் பாட்டில்கள் அந்த நுகர்வோர் பயன்படுத்திய பிறகு அவருக்கு ஒரு கட்டணம் கொடுக்கிறோம் என தெரிவிப்பது என்பது சிறப்பான ஒரு விழிப்புணர்வாக இருக்கும்.  எனவே தனிப்பட்ட நபரான நாமும் மாற வேண்டும்.  பிளாஸ்டிக் தயாரிப்பாளரும் சரி, விழிப்புணர்வு செயல்பாடுகளும் சரி,  செயல்பாடுகளும் சரி இனியும் இன்னும் கொஞ்சம் வலுவாக செயல்பட வேண்டும்.   முன்னதாக, இந்நிகழ்ச்சியில் விழிப்புணர்வுக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ள மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களுக்கான கண்காட்சி அரங்குகளை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் பார்வையிட்டார்.

இதனைத் தொடர்ந்து, மாணவ, மாணவியர்கள் மறுசுழற்சி செய்வதற்காக தாங்கள் சேகரித்த பிளாஸ்டிக் பொருட்களை மாவட்ட கலெக்டர் முன்னிலையில் தனியார் நிறுவனத்தினரிடம் வழங்கினர். மேலும், மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் மூலம் தயாரிக்கப்பட்ட உடையையும் மாவட்ட கலெக்டருக்கு தனியார் நிறுவனத்தினர் வழங்கினர். இதில் நகர்மன்ற உறுப்பினர்கள் அம்பிகா ராஜசேகர், அயூப்அலி,  கு.பிரபாகரன் மற்றும் கே.கணேஷ், ஜஸ்டினா, தனசேகர் உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.

Tags : Municipal ,High ,School ,
× RELATED திருநின்றவூர் நகராட்சியில் காலி...