×

உழவன் செயலி மூலம் பயனடைய விவசாயிகளுக்கு வேண்டுகோள்

மல்லூர்,  பிப்.21: பனமரத்துப்பட்டி வட்டார விவசாயிகள் 23 முக்கிய சேவைகள்  உள்ளடக்கிய உழவன் செயலியினை பயன்படுத்தி பயனடைய வேளாண்மை உதவி இயக்குநர்  வேலு கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பயிர்  சாகுபடி உள்ளிட்ட பல்வேறு உழவர் நலன் சார்ந்த தகவல்களை விவசாயிகளுக்கு  உடனடியாக தெரிவிக்கும் வகையில், உழவன் செயலி சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. இந்த செயலி மூலம் விவசாயிகளுக்கு 23  முக்கிய சேவைகள் வழங்கப்படுகின்றன. மானியத் திட்டங்கள்,  இடுப்பொருட்கள் முன்பதிவு, பயிர் காப்பீடு விபரம், உரங்கள் இருப்பு நிலை,  விதை இருப்பு நிலவரம், வாடகைக்கு கிடைக்கும் வேளாண் இயந்திரங்கள்  வாடகைக்கு, சந்தை விலை நிலவரம், வானிலை அறிவுரைகள், உழவர் அலுவலர் தொடர்பு  திட்டம், பண்ணை வழிகாட்டி, இயற்கை பண்ணைய பொருட்கள், அனைத்து  திட்டங்கள் குறித்த விபரங்கள்  மற்றும் பயனாளிகள் தகுதிகள் தொடர்பாகவும் தெரிந்து கொள்ளலாம்.

பனமரத்துப்பட்டி  வட்டாரத்தில் கூட்டுறவு மற்றும் தனியார் உரக்கடைகளில் முக்கிய உரங்களின்  இருப்பு விபரங்களை அவ்வப்போது உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம். இதன் மூலம், வேளாண்  விரிவாக்க மைய கிடங்கு விதை இருப்பினையும் அவ்வப்போது தெரிந்து கொள்ளலாம்.  வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு பயன்படுத்திக் கொள்ள அரசு மற்றும் தனியார்  மையங்களை இச்செயலி மூலம் தொடர்பு கொண்டு பயனடையலாம். விளை பொருட்களுக்கு  தகுதியான விலை கிடைக்க, மாவட்ட ஒழுங்குமுறை விற்பணை கூடங்களில் ஏலத்தில்  அன்றைய தேதியில் நிலவரங்களை தெரிந்துகொள்ளலாம்.  இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED தொடர் கொள்ளையில் ஈடுபட்ட நபர் கைது