×

பெரம்பலூர் கலெக்டர் வழங்கினார் மாணவர்களை மேம்படுத்துவது எப்படி?

பெரம்பலூர்,பிப்.21: பெரம்பலூர் வட்டார வள மையத்தில் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கான குறைதீர் கற்பித்தல் பயிற்சி நடந்தது. பெரம்பலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளின் குடியிருப்பு பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு இல்லாம் தேடிக் கல்வித் திட்டத்தில் பணியாற்றும் தன்னார்வலர்களுக்கு (தொடக்க நிலை) குறைதீர் கற்பித்தல் பயிற்சி பெரம்பலூர் வட்டார வளமையத்தில் நடைபெற்றது. இப்பயிற்சியை வட்டார வள மையம் மேற்பார்வையாளர் தேவகி துவக்கி வைத்து உரையாற்றினார். குறைதீர் கற்பித்தல் பயிற்சிக்கு கரு த்தாளர்களாக ஆசிரியர் பயிற்றுநர்கள் சுப்ரமணி யன், ரமேசு மற்றும் அங்காள ஈஸ்வரி ஆசிரியை ஆகியோர் குறைதீர் கற்பித்தல் பயிற்சியினை வழங்கினர்.

இதேபோன்று சத்திரமனை மற்றும் குரும்பலூர் குறுவள மையத்தில் நடந்த பயிற்சியை மாவட்ட கல்வி அலுவலர் குழந்தை ராஜன் துவக்கி வைத்து உரையாற்றினர். இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கணேசன், ஆசிரியர் பயிற்றுநர்கள் கலைவாணன் மற்றும் ஜனனி ஆகியோர் முன்னிலையில் ஆசிரியர்கள் ஜார்ஜ், ஷகிலா பயிற்சியில் கருத்தாளராக செயல்பட்டனர். சிறுவாச்சூர் மற்றும் அம்மாபாளையம் குறுவள மையத்தில் தலைமை ஆசிரியர் சுப்ரமணியன், பொறுப்பு தலைமை ஆசிரியை கயல் விழி ஆகியோர் பயிற்சியை துவக்கி வைத்து உரையாற்றினர். பின்னர் ஆசிரியர் பயிற்றுநர்கள் குணசேகரன், ரமேஷ், ஆசிரியர்கள் ரமேஷ், அங்கமுத்து ஆகியோர் கருத்தாளர்களாக செயல்பட்டனர்.

தன்னார்வலர்களுக்கு நடைபெறும் பயிற்சியினை மாவட்ட உதவி திட்ட அலுவலர் ரமேஷ் பார்வையிட்டு தன்னார்வலர்களை ஊக் கப்படுத்தி பேசியதோடு எவ்வாறு மாணவர்களை மேம்படுத்த வேண்டும் என அறிவுரைகள் வழங்கினார். இவர்களுடன் வட்டார கல் வி அலுவலர் ஜோதிலட்சு மி பார்வையிட்டு தன்னா ர்வர்களை ஊக்கப்படுத்தி பேசினார்.தன்னார்வலற்கான குறைதீர் கற்பித்தல் பயிற்சி காலை 9:30 மணிக்கு தொட ங்கி மாலை 4:30 மணி வரை நடைபெற்றது இப்ப யிற்சியில் 169 பேர் கலந்து கொண்டனர். பயிற்சியில் கலந்து கொள்ளாத தன் னார்வலர்களுக்கு வருகிற 25ம் தேதியன்று நடைபெ றும் பயிற்சியில் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்ற தகவலை வட்டார வளமைய மேற்பார்வையாளர் தேவகி தெரிவித்துள்ளார்.

Tags : Perambalur ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி