×

கருமாத்தூரில் வாலிபர் கொலையில் 10 பேர் கைது

திருமங்கலம், பிப். 21: மதுரை அருகே கருமாத்தூரில் வாலிபரை மிதித்து கொன்ற வழக்கில் 10 பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை அருகே கருமாத்தூரில் உள்ள கோயிலில் சாமி கும்பிடுவதற்காக தேனி மாவட்டம் வீரபாண்டியை சேர்ந்த அபினாஷ், அவரது உறவினர் உசிலம்பட்டியை சேர்ந்த தாமோதரன் உள்ளிட்டோர் வந்தனர்.

சாமி கும்பிட்டு விட்டு கோயில் வளாகத்தில் படுத்து தூங்கும் போது கருமாத்தூரினை சேர்ந்த தங்கபால்பாண்டி, நீதி (21) ஆகியோர் கத்தியை காட்டி மிரட்டி தாமோதரனிடம் செல்போனை பறித்துள்ளனர்.  அவர் சப்தம் போடவே அருகே படுத்திருந்த 10க்கும் மேற்பட்டோர் எழுந்து தங்கபால்பாண்டி, நீதியை விரட்டி தாக்கியுள்ளனர். இதில் நீதி தவறி கீழே விழுந்துள்ளார். தொடர்ந்து அக்கும்பல் மிதித்ததில் நீதி சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

இதுதொடர்பாக வழக்குபதிந்த செக்கானூரணி போலீசார் வீரபாண்டியை சேர்ந்த அபினாஷ் (21), உசிலம்பட்டி போத்தம்பட்டியை சேர்ந்த தாமோதரன் (20), பிரவீன்குமார் (29), பாரத் (25), சசிகுமார் (22), தேனியை சேர்ந்த ஆகாஷ் (19), ஆண்டிப்பட்டியை சேர்ந்த யோகேஸ்வரன் (20), தேனியை சேர்ந்த ஜெயதேவன்(21), ரேணுகுமார் (21), கணேஷ்பிரபு (21) ஆகிய 10 பேரை கைது செய்தனர்.

Tags : Karumathur ,
× RELATED உசிலம்பட்டி அருகே சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய போலீசார்