×

ஈரோடு அந்தியூரில் சலூன் நடத்துபவர்கள் சங்க நடவடிக்கைகளுக்கு முழுமையாக கட்டுப்பட வேண்டும்

அந்தியூர், பிப். 21: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 90-க்கும் மேற்பட்ட சவரத் தொழிலாளர் குடும்பங்கள் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக அந்தியூரில் சவரத்தொழிலில் வட மாநிலத்தவர் மற்றும் வேற்று சமுதாயத்தினர் சிலர் சலூன் கடைகளைத் தொடங்கி தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் தங்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுவதாக கூறி, உள்ளூர் சவரத் தொழிலாளர்கள் அவர்களின் கடைகளை மூடி நடவடிக்கை எடுக்க கோரி கடந்த 5 நாட்களாக  கடையை அடைத்து போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் எந்த ஒரு நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்க வில்லை எனக் கூறி சவரத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம், சாலை மறியல், கடையடைப்பு என பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.
நேற்று அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சவரத் தொழிலாளர்களுடன் வட்டாட்சியர் தாமோதரன்,  முன்னிலையில் அமைதிப் பேச்சு வார்த்தை நடந்தது.இதில் சவரத்தொழிலாளர்கள் சங்க அந்தியூர் பகுதி செயலாளர் பச்சியண்ணன், அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்ற கழக மாநில பொருளாளர் இளங்கோ உள்பட முக்கிய பொறுப்பாளர்கள் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தையில் மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சவரத்தொழிலை நடத்தும்போது சவரத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திட வேண்டும், சங்க நடவடிக்கைகளுக்கு முழுமையாக கட்டுப்பட வேண்டும், அனைத்து சாதியினரும் அனைத்து வேலைகளையும் செய்யலாம் இதை தடுக்கக்கூடாது உள்ளிட்ட கருத்துக்கள் இருதரப்பிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. பேச்சுவார்த்தையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மோகன்ராஜ், சண்முகசுந்தரம்  உடன் இருந்தனர்.

Tags : Erode ,Andhiur ,
× RELATED ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே...