×

பழைய வாகன விற்பனையில் நடைபெறும் குளறுபடிகளை போக்க வாகனத்துடன் போட்டோ எடுத்து ஆன்லைனில் பதிவேற்றம் ஆர்டிஓ அலுவலகங்களில் நடவடிக்ைக

வேலூர், செப்.22: பழைய வாகன விற்பனையில் நடைபெறும் குளறுபடிகளை போக்க வாகனத்துடன் போட்டோ எடுத்து ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் பணிகள் ஆர்டிஓ அலுவலகங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் சுமார் 90 ஆர்டிஓ அலுவலகங்கள் வரையில் இயங்கி வருகிறது. ஆர்டிஓ அலுவலகங்கள் மூலம் புதிய வாகனங்கள் பதிவு செய்வது, ஓட்டுனர் உரிமம் பெறுவது, வாகனங்களுக்கு தகுதிச்சான்று, ஓட்டுனர் உரிமம் புதுப்பித்தல், பழைய வாகனங்களுக்கு பெயர் மாற்றம் செய்வது, விற்பனை செய்வது போன்ற பணிகள் ஆர்டிஓ அலுவலகங்கள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இதில் தமிழகத்தில் உள்ள அனைத்து ஆர்டிஓ அலுவலகங்களும் வாகன் என்ற சாப்ட்வேர் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதுமாக இந்த ஒரே சாப்ட்வேர் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.

வாகனங்கள் தொடர்பான விவரங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதில் பழைய வாகனங்கள் விற்பனை செய்யும்போது, சிலர் இது என்னுடைய வாகனம் எனக்கு தெரியாமலேயே விற்பனை செய்யப்பட்டுள்ளது. பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று ஆட்சேபனை தெரிவிப்பது போன்ற பிரச்னைகள் எழுகிறது. இதனை தடுக்க ஆர்டிஓ அலுவலகங்களில், பழைய வாகனம் வாங்குபவர்களை, அந்த வாகனத்துடன் நிற்க வைத்து போட்டோ எடுத்து அதனை ஆன்லைனில் பதிவேற்றம் ெசய்யப்படுகிறது.

இந்த பதிவேற்றம் கடந்த சில மாதங்களாக நடைமுறையில் உள்ளது. இதன் மூலம் பழைய வாகனங்கள் பெயர் மாற்றம் செய்தபின்னர், ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வாக அமைந்துள்ளது என்று போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், பழைய வாகனங்கள் பெயர் மாற்றம் செய்யப்படும்போது, வாகனம் வாங்குபவரை, வாகனத்துடன் நிற்க வைத்து போட்டோ எடுத்து ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், ‘பழைய வாகனம் பெயர் மாற்றம் செய்யும்போது குளறுபடிகள் ஏற்படுவதை தடுக்க, வாகனம் வாங்குபவரை வாகனத்துடன் நிற்க வைத்து போட்டோ எடுத்து ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இது சில மாதங்களாக நடைமுறையில் உள்ளது. பெயர் மாற்றம் செய்வதில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வாக அமைந்துள்ளது என்றார்.

Tags : RTO ,
× RELATED ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு சான்றுக்கு...