×

ஆண்டிமடம் கூவத்தூர் அரசு ஐடிஐயில் பட்டமளிப்பு விழா

ஜெயங்கொண்டம், செப்.20: ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஆண்டிமடம் கூவத்தூர் அரசு ஐடிஐயில் நடந்த பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு பட்டங்களை எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் வழங்கினார். ஜெயங்கொண்ட ம் சட்டமன்ற தொகுதி, ஆண்டிமடம் ஒன்றியம், கூவத்தூர் ஊராட்சியில், தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத் துறை, வேலைவாய்ப்பு பயிற்சித் துறை சார்பில் இயங்கிவரும்,ஆண்டிமடம் -கூவத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் பயிற்சி நிலைய முதல்வர் ஜான்பாஷா தலைமை வகித்தார்.

எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் கலந்துகொண்டு 200 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி, வாழ்த்தி பேசினார். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சேவியர் சஞ்சீவ் குமார், தனசேகரன், ஊராட்சி மன்ற தலைவர் டேவிட், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.திமுக ஒன்றிய செயலாளர்(தெற்கு) கலியபெருமாள், துணை தலைவர் ஜாக்குலின் ஜோசப் மற்றும் பயிற்சி நிலைய பயிற்றுநர்கள் , திமுக நிர்வாகிகள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். முடிவில் விரிவுரையாளர் அறிவழகன் நன்றி கூறினார்.
கனிம சுரங்கங்களில் நிகழும் நிகழ்வுகளை உடனுக்குடன் பதிவு செய்ய வேண்டும்

Tags : Govt ITI ,Antimadam Couvatur ,
× RELATED விருப்பமுள்ள சிறைவாசிகளின் விவரங்கள்...