×

கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணை கேனுடன் வந்த தம்பதி

கும்பகோணம், செப்.6: அரியலூர் மாவட்டம், டி.பழூர் காமராஜர் நகரை சேர்ந்தவர் ராஜாங்கம் மகன் குமார் (48). கூலி தொழிலாளி. இவர், கும்பகோணம் அருகே உள்ள அத்தியூர் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் மகள் சித்ரா (42) என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் சித்ராவின் தந்தை கிருஷ்ணனின் பூர்வீக சொத்தான 3 ஏக்கர் நிலம் மற்றும் 150 குழி வீட்டு மனையை அவரது அண்ணன் பாலசுப்பிரமணியன் வைத்துக்கொண்டு, சித்ராவுக்குரிய பங்கை தர மறுப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை இது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கோட்டாட்சியர் அலுவலகத்திலும் உரிய நீதி கிடைக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன் நேற்று குமார், சித்ரா இருவரும் மண்ணெண்ணெய் கேனுடன் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். தகவலயறிந்து கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு விரைந்து வந்த போலீசார், தடுத்து நிறுத்தி மண்ணெண்ணெய் கேனை பிடுங்கி கீழே ஊற்றினர். பின்னர் தம்பதி இருவரும் கோட்டாட்சியர் லதாவிடம் தங்களது கோரிக்கையை தெரிவித்தனர். இதுகுறித்து நாளை (இன்று) செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததால் அவர்கள் வீடு திரும்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

Tags :
× RELATED பட்டாசு திரி பதுக்கிய இருவர் கைது