×

பரமக்குடி அருகே கருப்பணசாமி கோயில் வருடாபிஷேக விழா

பரமக்குடி, செப்.6: பரமக்குடி அருகே உள்ள திருவாடியில் கல்வடி கருப்பண சாமி கோயில் வருடாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. பரமக்குடி அருகே உள்ள திருவாடி கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கல்வடி கருப்பணசாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஓராண்டு முடிந்த நிலையில், நேற்று வருடாபிஷேகம் நடைபெற்றது. காலை 7 மணிக்கு மகாபிஷேகம், அலங்கார தீபாராதனைகள், வருடாபிஷேகம் பூஜைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, பெண்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்து தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தி கருப்பணசாமி தரிசனம் பெற்றனர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், பரமக்குடி எம்எல்ஏ முருகேசன், போகலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன், உயர்நீதிமன்ற மதுரை கிளை அரசு வழக்கறிஞர் சஞ்சய் காந்தி, போகலூர் ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் பூமிநாதன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கார்த்திக் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கல்வடி கருப்பணசாமி ஆலய குடிமக்கள், இளைஞர்கள் மற்றும் மகளிர் மன்றத்தினர் செய்திருந்தனர்.

Tags : Karuppanaswamy temple ,Paramakkudy ,
× RELATED பரமக்குடி அருகே ஆரோக்கிய தின விழா