×

தொண்டியில் ரத்த தான முகாம்

தொண்டி, செப். 3: தொண்டியில் மக்கள் சட்ட உரிமைகள் கழகம், தொண்டி வடக்கு தெரு ஜமாத் மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை இணைந்து ரத்த தான முகாம் நடத்தினர். மாவட்ட செயலாளர் காஜா முகைதீன் தலைமையில் மாநில ரத்த தான பிரிவு செயலாளர் நாகூர் கனி , வடக்கு தெரு ஜமாத் நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்ற முகாமில் 50க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர். மாவட்ட அமைப்பாளர் ரமேஷ், ஒருங்கிணைப்பாளர் ராஜா, சேக் அப்துல்லா, டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, ரமேஷ் உட்பட பலர் ஏற்பாடுகளை சென்றிருந்தனர். சமூக அமைப்பினர், தன்னார்வலர்கள் என பலரும் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர்.

Tags : Thandi ,
× RELATED தொண்டி போலீஸ் ஸ்டேசனில் கூடுதல் போலீசார் நியமிக்க மக்கள் கோரிக்கை