×

கருங்கல்பாளையம் நகரவை மகளிர் பள்ளியில் சிறார் திரைப்படவிழா

ஈரோடு,செப்.2:தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் சிறார் திரைப்படங்கள் திரையிடப்படும் என பள்ளிக் கல்வித் துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.  அதன்படி, ஈரோடு, கருங்கல்பாளையம் நகரவை மகளிர் மேல் நிலைப்பள்ளியில்  ”சிறார் திரைப்பட விழா” நேற்று நடைபெற்றது. இதில், “சில்ரன்ஸ் ஆஃப் ஹெவன்” எனும் திரைப்படம் திரையிடப்பட்டது. படத்தை 680 மாணவிகள் கண்டுகளித்தனர்.தொடர்ந்து, திரைப்படம் குறித்து மாணவிகள்  ஆசிரியர்கள் கலந்துரையாடல் நடைபெற்றது.மேலும் மாணவிகள், திரைப்படம் குறித்த தங்களது விமர்சனத்தையும் எழுதி சமர்ப்பித்தனர்.

மாதந்தோறும் நடத்தப்படும் இத்திரைப்படவிழாவில் அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி சிறார் திரைப்படங்கள் திரையிடப்படும் என்றும், என்ன திரைப்படம் திரையிடப்படும் என்பது குறித்து பள்ளிக் கல்வித் துறையின் பரிந்துரையின்படி சிறார் திரைப்படங்கள் திரையிடப்படும் என்றும் பள்ளித் தலைமையாசிரியர் மாலா தெரிவித்தார். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் சசிகலா, உறுப்பினர் கணேஷ் மற்றும் பள்ளி ஆசிரியைகள் செய்திருந்தனர். மேலும், மாவட்டம் முழுவதிலும் உள்ள 314 நடுநிலைப்பள்ளிகள், 236 மேல் நிலை பள்ளிகள் என 550 அரசுப் பள்ளிகளிலும் ”சிறார் திரைப்பட விழா” திரைப்படங்கள் திரையிடப்பட்டன.

Tags : Juvenile Film Festival ,Karungalpalayam Nagaravai Girls School ,
× RELATED தமிழகத்தில் முதன்முறையாக கும்பகோணம்...