×

நகர்மன்ற கூட்டத்தில் தலைவர் தகவல் ஆறுகாட்டுதுறை துறைமுக பணி சிபிஐ விசாரிக்க வேண்டும்

நாகப்பட்டினம், ஆக. 27: நாகப்பட்டினம் மாவட்டம் ஆறுகாட்டு துறை துறைமுக பணிகளை சிபிஐ விசாரிக்க வேண்டும் என சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது. இது குறித்து கட்சி மாநில அமைப்பாளர் வேணுகோபால் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பிள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது: நாகப்பட்டினம் மாவட்டம் ஆற்காட்டுதுறை பகுதியில் மீன் பிடி துறைமுகம் உள்ளது. இங்கு தூண்டில் வளைவு அமைக்கும் பணிகளில் நடந்து வருகிறது. இந்த பணிகள் தரமற்ற முறையில் நடப்பதாக பல்வேறு தரப்பிலிருந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. ஆற்காட்டு துறை துறைமுகப் பணிகள் முழுக்க முழுக்க ஒன்றிய அரசின் நிதி உதவியில் நடைபெறும் பணியாகும். இந்த பணியில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்தாண்டு சம்பா சாகுபடிக்கு தேவையான வேளாண் இடுப்பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும். தமிழக அரசு நெல் குவிண்டாலுக்கு ரூ.2 ஆயிரத்து 500 வழங்கி ஊக்கத்தொகையாக ரூ.200 வழங்க வேண்டும்.

Tags : Arukatuthurai ,CBI ,
× RELATED “இவர்களின் அமைதி ஆபத்தானது”: பிரதமர்...