×

கஞ்சா விற்ற கடலூர் வாலிபர் கைது

வில்லியனூர், ஆக. 26: புதுச்சேரி, ஒதியம்பட்டில் உள்ள ஒரு தனியார் சோப்பு கம்பெனி அருகே கஞ்சா  விற்பனை நடப்பதாக வில்லியனூர் காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எஸ்ஐ முருகன்  தலைமையிலான போலீசார் சம்பவத்தன்று இரவு அங்கு சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த ஒரு வாலிபரை மடக்கி  விசாரித்தனர்.
 அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளிக்கவே அவரை  சோதனையிட்டனர். அப்போது அவர் தனது பாக்கெட்டுகளில் 200 கிராம் கஞ்சா  பொட்டலங்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை  பறிமுதல் செய்த போலீசார், அந்த வாலிபரை உடனே காவல் நிலையம் அழைத்துச்  சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர், கடலூர் மாவட்டம்  சந்திக்குப்பம்பேட், மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சரண் (19)  என்பதும், சம்பவம் நடந்த பகுதியில் வாலிபர்களுக்கு கஞ்சா விற்க  வந்திருந்ததும் அம்பலமானது.
 இதையடுத்து சரண் மீது கஞ்சா தடுப்பு  பிரிவின்கீழ் வழக்குப்பதிந்த போலீசார், அவரை கைது செய்து மாஜிஸ்திரேட் முன்பு  ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags : Cuddalore Valiper ,
× RELATED காட்பாடியில் மாயமான வடமாநில சிறுமி...