×

அருப்புக்கோட்டை அருகே காரில் கடத்தி சென்று பெண்ணைக் கூட்டுப் பலாத்காரம் 5 பேர் கைது: 2 பேருக்கு வலை

அருப்புக்கோட்டை, ஆக. 24: அருப்புக்கோட்டை அருகே, பெண்ணை காரில் கடத்திச் சென்று கூட்டுப் பலாத்காரம் செய்து, 5 பவுன் நகையை பறித்தது தொடர்பாக போலீசார் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவான 2 பேரை தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 44 வயது பெண். இவர், நேற்று காலை விருதுநகருக்கு சென்றுவிட்டு ஊருக்கு பஸ்சில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அருப்புக்கோட்டை காளையார்கரிசல்குளத்தை சேர்ந்த முத்துச்செல்வம் (44) என்பவர் விருதுநகரிலிருந்து காரில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.

இதைப் பார்த்த பெண், அவருடன் போனில் பேசி, பாலவநத்தத்தில் பஸ்சில் இருந்து இறங்கி, முத்துச்செல்வம் காரில் ஏறிக் கொண்டார். பாலவநத்தம்-கோபாலபுரம் சாலையில் கார் சென்று கொண்டிருந்தது. ரயில்வே பாலம் அருகே, இயற்கை உபாதை கழிப்பதற்காக காரிலிருந்து பெண் இறங்கினார். அப்போது கார் மற்றும் டூவீலரில் வந்த 7 பேர் கொண்ட கும்பல், முத்துச்செல்வத்தை தாக்கியதில், அவர் மயக்கமடைந்தார். பின்னர் அவர்கள் பெண்ணை அவர்களது காரில் கடத்திச் சென்று, கோவிலாங்குளம் கண்மாய் கரையில் வைத்து 7 பேரும் சேர்ந்து பெண்ணை கூட்டுப்பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் பெண்ணிடமிருந்த 5 பவுன் நகை, செல்போன், பணம் ஆகியவற்றை பறித்து கொண்டு, பெண்ணை காரில் ஏற்றி, அவரது ஊர் விலக்கில் இறக்கிவிட்டு 7 பேரும் தப்பனர்.

அவ்வழியாக சென்றவர்கள் முத்துச்செல்வம் மயக்கமுற்று கிடப்பது குறித்து அருப்புக்கோட்டை தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் முத்துச்செல்வத்தை மீட்டு, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிசிடிவி கேரமாவை பதிவை ஆய்வு செய்து, இது தொடர்பாக அருப்புக்கோட்டை கோவிலாங்குளம் சீனிவாசன் (42), மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகா, வி.வெங்கடாச்சலபுரம் ஜெயக்குமார் (23), அதே ஊரைச் சேர்ந்த ராம்குமார் (20), வி.குச்சம்பட்டி அழகுமுருகன் (19), விருதுநகர் அல்லம்பட்டி எம்ஜிஆர் காலனியைச் சேர்ந்த 18 வயது சிறுவன் என 5 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து பெண்ணின் 5 பவுன் நகை, பணம், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தலைமறைவான 2 பேரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Arupkkottai ,
× RELATED 200 கிலோ புகையிலை பொருட்கள் கடத்திய வாலிபர் கைது