உடுமலை அரசு கலைக்கல்லூரியில் 2-ம் கட்ட கலந்தாய்வு 27-ம் தேதி துவக்கம்

உடுமலை, ஆக. 24: உடுமலை அரசு கலைக்கல்லூரியில் 2-ம் கட்ட கலந்தாய்வு வரும் 27-ம்தேதி தொடங்குகிறது.உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 2022-23-ம் கல்வி ஆண்டுக்கான இளநிலை பாடப்பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை கடந்த 8-ம்தேதி முதல் நடைபெற்று வருகிறது. இளநிலைப் பாடப்பிரிவுகளில் மொத்தம் 864 இடங்கள் உள்ளன.முதல்கட்ட கலந்தாய்வில் பெரும்பான்மையான இடங்கள் நிரப்பப்பட்ட நிலையில், கலைப் பாடப்பிரிவுகளில் 17 இடங்கள், அறிவியல் பாடப்பிரிவுகளில் 13 இடங்கள், வணிகவியல் பாடப்பிரிவுகளில் 32 இடங்கள் என மொத்தம் 62 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

காலியாக உள்ள இடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் 27-ம்தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்த குறுஞ்செய்தி, தரவரிசைப் பட்டியலின்படி ஏற்கனவே விண்ணப்பித்திருந்த மாணவர்களின் தொலைபேசி எண்ணிற்கு அனுப்பிவைக்கப்படும். எஸ்.எம்.எஸ். பெறப்பட்ட மாணவர்கள் மட்டும் குறிப்பிட்ட நேரத்தில் கலந்தாய்வில் கலந்துகொள்ளவேண்டும். ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்கள், 6 போட்டோக்கள் கொண்டு வரவேண்டும். மேற்கண்டவாறு கல்லூரி முதல்வர் சோ.கி.கல்யாணி தெரிவித்துள்ளார்.

Related Stories: