×

காங்கிரஸ் கட்சிக்கு உட்கட்சி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் தேவை- காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல்

டெல்லி: காங்கிரஸ் கட்சிக்கு உட்கட்சி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் தேவை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியை தற்போது இருக்கும் நிலையில் பார்க்க விரும்பவில்லை என்று கபில் சிபல் பேட்டியளித்துள்ளார். கோடிக்கணக்கான மக்கள் வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர். வேலை இல்லாத் திண்டாட்டம் அதிகரித்துவிட்டது. மக்களுக்கு சொந்தமான பலகோடி மதிப்புள்ள சொத்துக்களை ஒன்றிய அரசு விற்றுக்கொண்டு இருக்கிறது. நாட்டின் தற்போதைய நிலையில் காங்கிரஸ் கட்சி இந்த நிலையில் இருப்பது தான் வருத்தம் தருகிறது என்று கபில் சிபல் தெரிவித்துள்ளார். ஒருநாளைக்கு கூட பதவியில் தொடர தகுதியில்லாத ஒன்றிய அரசை எதிர்த்து காங்கிரஸ் கட்சி ஒற்றுமையுடன் போராட வேண்டும் என்று கபில் சிபல் வலியுறுத்தியுள்ளார்….

The post காங்கிரஸ் கட்சிக்கு உட்கட்சி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் தேவை- காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் appeared first on Dinakaran.

Tags : Congress party ,Congress ,Kabil Sibal ,Delhi ,Kabil Sipal ,Senior Leader ,Dinakaran ,
× RELATED அமமுக இடம்பெறும் கூட்டணி வெற்றிபெறும்: தஞ்சையில் டி.டி.வி. தினகரன் பேட்டி