- ஆல்வர்பெட், எம். டி
- க.
- ஸ்டாலின்
- சிதம்பரம்
- சென்னை
- ஆல்வர்பெட்டா
- கே. ஸ்டாலின்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- திமுகா
- காங்கிரஸ்
- தலைமை அதிகாரி
- கிறிஷ் சோதங்கர்
சென்னை: ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை ப.சிதம்பரம் நேற்று திடீரென சந்தித்து பேசினார். தமிழ்நாட்டில் சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் திமுகவுடன் தொகுதிப் பங்கீட்டிற்கான பேச்சுவார்த்தைக்காக, தமிழகத்திற்கான காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் சூரஜ் எம்.என்.ஹெக்டே, நிவேதித் ஆல்வா, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் என 5 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் தலைமை அமைத்துள்ளது.
இந்த குழுவினர் அண்மையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினர். அப்போது சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். கடந்த முறை சட்டப்பேரவை தேர்தலின் போது திமுக தலைமையிலான அணியில் காங்கிரசுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதில் 18 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் கடந்த முறையைவிட சற்று அதிகமான தொகுதிகளை கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக திமுக தரப்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று காலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் திடீரென சந்தித்து பேசினர். மரியாதை நிமித்ததாக முதல்வரை அவர் சந்தித்ததாக கூறப்படுகிறது.
