×

ஆடி அமாவாசை பொய்யாதநல்லூர் சாமுண்டீஸ்வரி கோயிலில் மிளகாய் சண்டியாகம்

அரியலூர், ஜூலை 29: அரியலூர் ஆடி அமாவாசையை முன்னிட்டு சாமுண்டீஸ்வரர் ஆலயத்தில் மிளகாய் சண்டியாகம் நடந்தது. அரியலூர் மாவட்டம் பொய்யாத நல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு பிரத்யங்கிரா தேவிக்கு மிகப்பிரம்மாண்டமான மிளகாய் சண்டியாகம் நடைபெற்றது. யாகத்தில் மூட்டை மூட்டையாக ஜாதிக்காய் கடுக்காய் கருமிளகு ரோஜா இதழ் முக்கனிகளான மா பலா வாழை  அவற்றை யாகத்தில் போட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்  கரும்பு தேங்காய் வாழைப்பழம் சப்போட்டா மாதுளை பழங்களையும் சேலைகளையும்  யாகத்தில் பக்தர்கள் இட்டனர். ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கான  ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் விழா கமிட்டியினர் செய்து இருந்தனர்.

Tags : Chili Sandiyak ,Poiyathanallur Chamundeeswari Temple ,Aadi Amavasi ,
× RELATED முன்னோர்களுக்கு தர்ப்பணம்