வேலாயுதம்பாளையம், ஜூலை 29: வேலாயுதம்பாளையத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின்கீழ் தொழில் முனைவோருக்கான சிறப்பு பயிற்சி நடைபெற்றது. கரூர் வட்டாரத்தில் தமிழக அரசின் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலமாக தொழில் முனைவோர்களுக்கான பிறதுறை அரசு நிறுவனங்களின் மானியத்துடன் கூடிய கடன் வழங்கும் ஆலோசனை முகாம் அருகம்பாளையத்தில் உள்ள வட்டார திட்ட மேலாண்மை அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வட்டார அணித்தலைவர் மணி துவக்க உரையாற்றினார். மாவட்ட செயல்அலுவலர் ஆரோன் ஜோஸ்வா ரூஸ்வெல்ட் தலைமை உரையாற்றினார். மாவட்ட தொழில் மைய புள்ளி விவர ஆய்வாளர் சுகுணா, வேளாண்மை அலுவலர் (வேளாண்மை வணிகம்) சுந்தரவடிவேல் மற்றும் தமிழக அரசின் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் செயல்அலுவலர் சுரேஷ்குமார் ஆகியோர் கலந்துகொண்டு மாவட்ட தொழில் மையம் மூலம் வழங்கக்கூடிய கடன்கள் மற்றும் திட்டத்தின் மூலம் வழங்கக்கூடிய மானியகடன் உதவிகள் பற்றியும் விளக்கமாக கூறினார். கரூர் வட்டாரத்திற்கு உட்பட்ட ஊராட்சி பகுதிகளைச் சேர்ந்த சுமார் 60க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு புதியதாக தொழில் செய்யக்கூடிய மற்றும் தொழிலை விரிவுபடுத்தக்கூடிய ஆலோசனைகளை பெற்றனர். கடன்வழங்கும் ஆலோசனை முகாமினை கரூர் வட்டார வாழ்ந்து காட்டுவோம் திட்ட, திட்ட செயலர் கனகராஜ் ஏற்பாடு செய்தனர்.