×

உணவு பொருட்களின் ஜிஎஸ்டி வரி உயர்வை கண்டித்து திருப்பூரில் தேமுதிக ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஜூலை 28: தேமுதிக சார்பில் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில துணைச் செயலாளர் அக்பர் தலைமை வகித்தார். மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் கோபால், மாநில மகளிரணி துணை செயலாளர் வனிதாதுரை, பட்டதாரி அணி துணை செயலாளர் ஜெகன், மாநகர் மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், வடக்கு மாவட்ட செயலாளர் பிரசாந்த் குமார், தெற்கு மாவட்ட செயலாளர் ஆறுச்சாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசு உயர்த்தியுள்ள உணவு பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும். கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

Tags : DMD ,Tirupur ,
× RELATED விருதுநகர் தொகுதியில் மீண்டும்...