×

கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு சேர்க்கை துவக்கம்

நெல்லை, ஜூலை 28: கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2022-2023ம் கல்வி ஆண்டில் கூட்டுறவு முழுநேரம் மேலாண்மை பட்டயபயிற்சி மற்றும் அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயபயிற்சிக்கான சேர்க்கை நடந்து வருகிறது. முழுநேரம் மேலாண்மை பட்டயபயிற்சியில் சேர்வதற்கு கல்வி தகுதியாக 12ம் வகுப்பு தேர்ச்சி, 11ம் வகுப்பு தேர்ச்சி அல்லது புதிய 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயபயிற்சிக்கு மேற்படி கல்வி தகுதியுடன் கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களும் பயிற்சியில் சேர்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள். தற்போது ஏழு பாடங்களின் அடிப்படையில் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின் காலம் முழுநேர பயிற்சி 1 ஆண்டும், அஞ்சல் வழி பட்டயபயிற்சி 9 மாத காலமும் நடைபெறும். வயது வரம்பு 1.08.2022 அன்று குறைந்தபட்சம் 17வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயதுவரம்பு இல்லை. விண்ணப்பங்கள் 28.07.2022 வரை விநியோகிக்கப்பட்டு வருகிறது. முழு நேர பயிற்சி மற்றும் அஞ்சல் வழி பட்டயபயிற்சிக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பதிவு தபால் அல்லது கொரியர் மூலமாக வரும் ஆகஸ்ட் 1ம் தேதி மாலை வரை பெறப்படும். இத்தகவலை திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் மேலாண்மை இயக்குநர் மோகன் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED காட்பாடியில் மாயமான வடமாநில சிறுமி...