×

தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது மகாராஜன் எம்எல்ஏ பேச்சு

வருசநாடு, ஜூன் 9: கடமலைக்குண்டு கிராமத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் வழங்கினார். இதில் கடமலை மயிலை திமுக ஒன்றியச் செயலாளர்கள் வக்கீல் சுப்பிரமணி, தங்கப்பாண்டி, ஒன்றிய கவுன்சிலர்கள் பிரபாகரன், கருப்பையா, அரசு மருத்துவர் ஜக்கப்பன், திமுக கிளைச் செயலாளர் தென்னரசு, பழனிச்சாமி, ஆறுமுகம், சுகாதார ஆய்வாளர் சிவராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.விழாவில் மகாராஜன் எம்எல்ஏ பேசுகையில், தமிழகத்தில் தற்போது மு.க.ஸ்டாலின் தலைமையில் பொற்கால ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எப்போதும் மக்களின் நலனுக்காக அரும் பணியாற்றி கொண்டிருக்கும் ஆட்சி திமுக ஆட்சி. மக்கள் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது என தெரிவித்தார். இதேபோல் வருசநாடு, சிங்கராஜபுரம், தும்மக்குண்டு, குமணன் தொழு, கண்டமனூர் உள்ளிட்ட பகுதிகளில் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவில் இனிப்பு வழங்கி கட்சி நிர்வாகிகள் கொண்டாடினர்.

Tags : Tamil Nadu ,Maharajan ,MLA ,
× RELATED புகழால் அல்ல, செயலால் மறக்க முடியாத...