×

ஆசிய கோப்பை வளைகோல்பந்து போட்டியில் வெண்கலம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த அரியலூர் வீரர்

அரியலூர், ஜூன் 8: அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில், ஆசிய கோப்பை வளைகோல்பந்து போட்டிகளில் வெண்கலப்பதக்கம் பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த அரியலூர் மாவட்டத்தினை சேர்ந்த கார்த்திக்கை கலெக்டர் ரமண சரஸ்வதி, பாராட்டு தெரிவித்தார். இந்தோனேஷியாவின் தலைநகரான ஜகார்தாவில் கடந்த மே 23ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை நடைபெற்ற ஆசிய கோப்பைக்கான வளைகோல்பந்து போட்டிகளில் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்ட அரியலூர் மாவட்டத்தினை சேர்ந்த மாணவன் கார்த்திக் மிகவும் சிறப்பாக விளையாடி வெண்கலப்பதக்கம் பெற்று இந்திய அணிக்காக பெருமை சேர்த்தார். இவர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கோவில்பட்டி சிறப்பு விளையாட்டு விடுதியில் பயின்று வருகிறார்.

முதல் கட்டமாக 23ம்தேதி அன்று இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்டது. அதில் இரு அணிகளும் 1-1 கோல் கணக்கில் சமப்புள்ளிகள் பெற்றது. 24ம் தேதி அன்று இந்தியா-ஜப்பான் ஹாக்கி அணிகள் மோதிக்கொண்டன. அதில் 2-5 கணக்கில் ஜப்பான் வெற்றி பெற்றது. 26ம் தேதி அன்று இந்தியா-இந்தோனேசியா அணிகள் மோதிக்கொண்டதில் 16-0 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. 28ம் தேதி அன்று இந்தியா- ஜப்பான் அணிகள் மோதிக்கொண்டதில் 2-1 கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. 29ம்தேதி அன்று மலேசியா-இந்தியா அணிகள் மோதிக்கொண்டதில் 3-3 என்ற கோல் கணக்கில் சமப்புள்ளிகள் பெற்றது.

31ம் தேதி அன்று இந்தியா-தென்கொரியா அணிகள் மோதிக்கொண்டது. அதில் 4-4 என்ற கோல் கணக்கில் சமப்புள்ளிகள் பெற்றது. ஜூன் 1ம் தேதி அன்று ஜப்பான்-இந்தியா அணிகள் மோதிக்கொண்டதில் 0-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெண்கல பதக்கம் பெற்று வெற்றி பெற்றது. மேற்காணும் போட்டிகளில் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டு வெற்றி பெற்ற அரியலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த அரியலூர் பசுபதி ஹாக்கி கழக மாணவன் கார்த்திக்கை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி, தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார். இந்நிகழ்வில் லெனின் மதுரை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஹரிகரன் கைப்பந்து பயிற்றுநர், ஜெயசுதா ஹாக்கி பயிற்றுநர், அரியலூர் மாவட்ட ஹாக்கி கழக உறுப்பினர்களும் உடனிருந்தனர்.

Tags : Ariyalur ,Asian Cup volleyball ,India ,
× RELATED அரியலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில்...