×

பெண்ணிடம் செயின் பறித்த வாலிபர் கைது

திருச்சி, ஜூன் 7: திருச்சி மாவட்டம் பெருகமணியை சேர்ந்தவர் ராமநாதன் மனைவி அமுதவள்ளி(50). இவர் நேற்று முந்தினம மதியம் பெருகமணி சாலையோரம் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாலிபர், அமுதவள்ளி அணிந்திருந்த ஒரு பவுன்செயினை பறித்து கொண்டு தப்பியோடினார். இது குறித்து பெட்டவாய்த்தலை போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தினர். அதில் செயின்பறிப்பில் ஈடுபட்டது, கொடியாலம் வடக்கு புலிவலத்தை சேர்ந்த சிவராசு மகன் சூர்யா(25) என்பது தெரியவந்தது. இதையடுத்து சூர்யாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Walier ,
× RELATED பெண்ணிடம் ஆபாச சைகை வாலிபர் கைது