×

மணிமண்டபம் திறப்புக்கு புறக்கணிப்புராணுவ வீரர் மனைவி குழந்தைகளுடன் உண்ணாவிரதம்

தொண்டி: தொண்டி அருகே கடுக்கலூர் கிராமத்தில் ராணுவ வீரரின் மணி மண்டபம் திறப்பு விழாவிற்கு மனைவி மற்றும் குழந்தைகளை அழைக்கவில்லை என கூறி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருவாடானை அருகே கடுக்கலூரை சேர்ந்த ராணுவ வீரர் பழனி. இவர் கடந்த 2020ல் சீன ராணுவத்தினருடன் நடந்த மோதலில் வீரமரணம் அடைந்தார். அவரது உடல் சொந்த ஊரான கடுக்கலூரில் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.அதே இடத்தில் பழனியின் பெற்றோர் மற்றும் தம்பி நினைவிடம் கட்டி நேற்று திறப்பு விழா செய்தனர். இவ்விழாவில் பழனியின் மனைவி வானதி தேவி மற்றும் அவர்களது குழந்தைகளை அழைக்கவில்லை என கூறி நினைவிடத்தின் அருகே சாலையில் உட்கார்ந்து உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார். ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் ஷேக் மன்சூர் அலைபேசியில் வானதி தேவியை தொடர்பு கொண்டு உண்ணாவிரதத்தை கைவிடும்படியும், பேச்சுவார்த்தை நடத்தி கொள்ளலாம் என கூறியதை தொடர்ந்து உண்ணாவிரதத்தை கைவிட்டு எழுந்து சென்றார்.

Tags :
× RELATED பட்டாசு திரி பதுக்கிய இருவர் கைது