×

மாரண்டஅள்ளியில் மீண்டும் மஞ்சப்பை இயக்கம் துவக்கம்

பாலக்கோடு, ஜூன் 4: மாரண்டஅள்ளி பேரூராட்சியில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்படி வீடுகள், விற்பனை வளாகங்கள் தொழில் நிறுவனங்கள் மற்றும் உணவகங்கள் தோறும் நேரடியாக சென்று குப்பைகளை சேகரித்து, மறுசுழற்சிக்குரிய பொருட்களை தயாரிக்கவும், மக்கும் கழிவுகளை தனியாகவும் கையாண்டு இயற்கை உரமாக்கும் வகையில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக்கிற்கு பதிலாக மஞ்சப்பை பயன்படுத்த வேண்டும். கடைகள், உணவகங்கள், மீன், இறைச்சி கடைகளுக்கு செல்லும்போது துணிப்பை, பாத்திரம் கொண்டு செல்ல வேண்டும். மாரண்டஅள்ளி பேரூராட்சியை தூய்மையாக வைத்துக் கொள்ள ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. முன்னதாக பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து நடைபெற்ற பேரணியில் செயல் அலுவலர் சித்திரக்கனி மற்றும் பேரூராட்சி அலுவலக பணியாளர்கள், கவுன்சிலர்கள் கொண்டனர்.

Tags : Marandahalli ,
× RELATED தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி...