×

தலைமையாசிரியைக்கு பணிநிறைவு பாராட்டு விழா

திருத்துறைப்பூண்டி, ஜூன் 3: திருத்துறைப்பூண்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியைக்கு பணி நிறைவு பாராட்டு விழா பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மாரிமுத்து தலைமையில் நடைபெற்றது. பொருளாளர் முத்துக்குமரன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் இந்திரா முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் (பொ) முத்துக்குமார் துவக்கி வைத்தார். பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில பொருளாளர் துரைராஜ், ஆசிரியர்கள் சின்னதுரை, வாசுகி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் பணி ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் குமுதம் பாராட்டி கவுரவிக்கப்பட்டார். இதில் ஒன்றியகுழு தலைவர் பாஸ்கர், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் தமிழ்செல்வி, கட்டிமேடு அரசு மேல்நிலைபள்ளி தலைமையாசிரியர் பாலு, ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் ராமலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் பாலாஜி வரவேற்றார். ஆசிரியர் சிங்காரவேலு நன்றி கூறினார்.

Tags : Headmistress ,
× RELATED நாகலாபுரம் பள்ளியில் ஆங்கில பேச்சு பயிற்சி முகாம்