×

ஆனைக்குட்டம் ஊராட்சியில் புதிய குடிநீர் கிணறு தோண்டும் பணிகள் தீவிரம் மக்கள் மகிழ்ச்சி

சிவகாசி: சிவகாசி அருகே ஆனைக்குட்டம் கிராமத்தில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பட்டாசு, தீப்பெட்டி கூலி தொழிலாளர்கள் நிறைந்த இந்த கிராமத்தில் தினமும் குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றன. எதிர்காலங்களிலும் இதே போன்று தினமும் குடிநீர் விநியோகம் செய்யும் வகையில் ஊராட்சி மன்ற தலைவர் முத்துராஜ் நடவடிக்கை எடுத்து வருகின்றார். அதில் ஒரு பகுதியாக ஆனைக்குட்டம் அருகே மீனாட்சிபுரம் கண்மாய் அருகே ரூ.12 லட்சத்து 25ஆயிரம் மதிப்பீட்டில் புதிய குடிநீர் கிணறு தோண்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. தற்போது வரை 20 அடியில் ஆழம் தோண்டப்பட்டுள்ளது. இப்பணிகளை ஊராட்சி மன்ற தலைவர் முத்துராஜ் பார்வையிட்டார். இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Anaikuttam ,
× RELATED அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது