×

திருமயம் அருகே லாரி மீது ஆம்னிபஸ் மோதி விபத்து: டிரைவர் படுகாயம்

திருமயம், செப்.26: திருமயம் அருகே ஆம்னி பஸ், லாரி மோதிய விபத்தில் டிரைவர் படுகாயமடைந்தார். பயணிகள் சிறிய காயத்துடன் உயிர் தப்பினர். சென்னையிலிருந்து சுமார் 33 பயணிகளுடன் ஆம்னி சொகு பஸ் ஒன்று திருச்சி – காரைக்குடி பைபாஸ் சாலையில் முதுகுளத்தூர் நோக்கி நேற்றுமுன்தினம் அதிகாலை 3 மணி அளவில் சென்று கொண்டிருந்தது. அப்போது புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள நமணசமுத்திரம் சி ப்ளக் நான்கு ரோடு பகுதியில் டிரைவர் திரும்ப முயன்ற செங்கல் ஏற்றி வந்த லாரியின் பின்புறம் ஆம்னி பஸ் பலமாக மோதியது. இதில் ஆம்னிபஸ் பலத்த சேதமடைந்தது. இந்நிலையில் அமைதியான இரவில் பலத்த சத்தம் கேட்டதால் அக்கம் பக்கத்தினர் எழுந்து வந்து பார்த்தனர்.

அப்போது லாரி மீது மோதிய ஆம்னி பஸ் சாலையோரம் சேதமடைந்து நின்றது. பஸ்ஸில் இருந்த பயணிகள் அலறி கூச்சலிட்டனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு நமணசமுத்திரம் போலீசார் வந்தனர். பின்னர் போலீசார், பொதுமக்கள் உதவியுடன் பஸ்ஸில் இருந்த பயணிகளை பத்திரமாக மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மரு த்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் பஸ் ஓட்டுநர் ராமநாதபுரம் மாவட்டம் காளீஸ்வரன் (31) பலத்த காயமடந்த நிலையில் மற்றொரு டிரைவர் கருப்பசாமி (32) உட்பட பயணிகள் லேசான காயத்துடன் உயிர்த்தபினர்.

விபத்து குறித்து போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் செங்கல் ஏற்றி வந்த லாரி கிருஷ்ணகிரியில் இருந்து அறந்தாங்கி செல்வதற்காக வழி தவறி நமணசமுத்திரம் வந்த நிலையில் அங்கு ஒருவரிடம் வழி கேட்டபோது லாரி டிரைவருக்கு வழி தவறி வந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து நமணசமுத்திரம் சி ப்ளக் பகுதியில் உள்ள நால்ரோட்டில் லாரியை திருப்புவதற்காக முயற்சி செய்தபோது பின்னால் வந்த ஆம்னி பஸ் எதிர்பாராதவிதமாக லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவித்தனர். இந்த விபத்தால் லாரியில் இருந்த செங்கல் சரிந்து சாலை முழுவதும் சிதறியதால் அப்பகுதியில் போக்குவர த்து பாதிப்பு ஏற்பட்டது.

The post திருமயம் அருகே லாரி மீது ஆம்னிபஸ் மோதி விபத்து: டிரைவர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Omnibus ,Tirumayam ,Thirumayam ,Chennai ,Trichy – Karaikudi ,Mudugulathur ,Padukayam ,
× RELATED திருமயம் அருகே திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்