×

கழுகுமலை அருகே கோயில் கொடை விழா

கழுகுமலை: கழுகுமலை அருகே கோயில் கொடை விழாவில் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ தரிசனம் செய்தார்.கழுகுமலை அருகே கே.வள்ளிநாயகபுரத்தில் தொட்டியகுல தொழுவ நாயக்கர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீவீரஜக்கதேவி கோயிலில் 23ம் ஆண்டு கொடைவிழா நடைபெற்றது. விழாவில் பால்குட ஊர்வலம், பூப்பெட்டி அலங்கார ஊர்வலம், சாமக்கொடை, பெண்கள் கும்மிப்பாட்டு நடந்தது. இதில் அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ கலந்து கொண்டு தரிசனம் செய்தார். தொடர்ந்து கே.முத்துசாமிபுரத்தில் உள்ள ஸ்ரீகாளியம்மன் கோயில் வைகாசி மாத கொடை விழாவிலும் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் வினோபாஜி, மாவட்ட ஜெ. பேரவை செயலாளர் செல்வக்குமார், நகர செயலாளர்கள் கடம்பூர் வாசமுத்து, கழுகுமலை முத்துராஜ், நகர இளைஞரணி தலைவர் கருப்பசாமி, வர்த்தக அணி தலைவர் காமராஜ், வேலாயுதபுரம் பஞ். துணை தலைவர் சுப்பராஜ், ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் பாலமுருகன், கிளை செயலாளர்கள் பாலமுருகன், பொன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Kalugumalai ,
× RELATED இலவச பட்டா வழங்கிய இடத்தில் குடியேறி பொதுமக்கள் போராட்டம்