×

ஆந்திரா மாநிலத்தில் 16 டன் தங்க கனிமம் கண்டுபிடிப்பு

திருமலை: ஆந்திரா மாநிலம், அனந்தபுரம் மாவட்டத்தில் தங்க கனிமம் இருப்பதாக   சுரங்கத்துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். மாவட்டத்தில் 10 இடங்களில் தங்க  கனிமம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, ராமகிரி பகுதியில் பாரத் கோல்ட் மைன்ஸ் லிமிடெட்(பிஜிஎம்எல்) சுரங்கங்கள் இருந்தன. இதனால், கடந்த 2001ம் ஆண்டு முதல் அகழ்வாராய்ச்சி நிறுத்தப்பட்டது. தற்போது இதனருகிலுள்ள பகுதிகளில் 2 இடங்கள், ரோட்டம் மண்டலம் போக்சம்பள்ளியில் 2 இடங்கள், கதிரி மண்டலம் ஜூகுலாவில் 6 இடங்கள் என மொத்தம் 10 இடங்களில் பூமிக்கு அடியில் தங்க கனிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜாக்கின் பகுதியில் 6 இடங்களில் 10 டன் தங்க கனிமம், ராமகிரியில் 4 டன் மற்றும் போக்சம்பள்ளியில் 2 டன் என மொத்தம் 16 டன் தங்க கனிமம் இருக்கும்.ஆந்திராவில் 9 இடங்களில் தங்கம், வைரம்,  உலோகம், தாமிரம், மாங்கனீசு மற்றும் இரும்பு தாது இருப்பதாக  இந்திய புவியியல் ஆய்வு(ஜிஎஸ்ஐ) அடையாளம் கண்டுள்ளது.  இவற்றை மத்திய அரசு சமீபத்தில் மாநிலத்திடம் ஒப்படைத்தது.  இப்பகுதிகளில் மேலும் கனிம ஆய்வு நடத்த அனுமதிக்கும் விதமாக  உரிமங்கள் வழங்க உள்ளது. கனிம இருப்பு அடையாளம் காணப்பட்ட இடத்தில் சுரங்கத்திற்கு குத்தகை வழங்கப்பட உள்ளது. இதற்காக  மின் ஏலம் விரைவில் நடத்தப்படும் என சுரங்க துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்….

The post ஆந்திரா மாநிலத்தில் 16 டன் தங்க கனிமம் கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Andhra state ,Tirumala ,Ananthapuram district ,
× RELATED காக்கிநாடா சஞ்சய் நகர் பகுதியில்...